திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் எழுதிய தோல் என்ற
நாவலுக்கு மத்திய அரசு உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதை
அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் பிரதானத் தொழிலாகத் தோல் பதனிடும் தொழில் திகழ்ந்து
வருகிறது. இந்தத் தொழிலில் வேலை பார்த்து வரும் அடிதட்டு மக்களின்
வாழ்க்கையையும், 1930 முதல் 1958 வரை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்
வாழ்க்கையில் நடந்த போராட்டத்தை மையமாக வைத்தும் இந்த நாவல்
எழுதப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், இந்த வெற்றி
கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காக அரசுக்கு நன்றி
தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா