கோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்னகோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்னகோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்ன

              ன்று நம் பிறந்த காலத்தில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது அது தான் 2737 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பு அதுவும் கீஸா பிரமிடுகளுக்கு நேர் மேலே. சுக்கிரன் - புதன் - சனி போன்ற மூன்று கோ
ள்களும் படத்தில் உள்ளது போல நாளை (டிசம்பர் 3) ஆனால் விஞ்சானிகள் இந்த கோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்ன என்று இது வரை கண்டுபிடிக்கவில்லை. இந்த கோள்கள் அணிவகுப்பு வரும் என்று கீஸா பிரமிடுகள் கட்டபட்டனவா? இது டிசம்பர் 21 உலகம் அழியும் நாள் என்று குறிபிட்ட 18 நாட்களுக்கு முன் நடப்பதால் 18 = 6 + 6 + 6 = இது ஒரு உலகம் அழியும் சான்ஸ் என்று சிலர் கூற சிலர் இதை வார்னிங் கொடுக்கவே இந்த கீஸா பிரமிடுகளும் இந்த 3 கோள்களின் அணிவகுப்பும் என்றும், சில வான் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வு சரியாக 25,920 ஆண்டுகள் கழித்து நடப்பதால் இந்த 18 நாள்களின் மணித்துளிகளை கூட்டினாலும் இதே 25,920 நிமிடங்கள் கிடைக்கின்றது என்று அடித்து கூறுகின்றனர். என்ன நடக்குமோ நடக்கட்டும்
இதை பற்றி நண்பர் ஷதீஷ் குமார் ஜோதிடரிடம் கேட்டபோது -------------- 2012 முடிவதற்குள் உலகம் ஒரு பெரு மாற்றத்தை சந்திக்கும் என இதை பற்றி ஒரு கணிப்பு இருக்கிறது இது நல்ல கிரக நிலை என்று
சொல்ல முடியாது..நான் ஏற்கனவே சொல்லியபடி 2012 முடிவதற்குள் ஒரு பாதிப்பு அது சுனாமியாகவும் இருக்கலாம் வர வாய்ப்பிருக்கு...அல்லது இரு பெரும் நாடுகளுக்குள் யுத்தமும் வரலாம்..அல்லது ஒரு புதிய கண்டுபிடிப்பு..உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்...இந்தியாவில் கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் எனவே இந்திய அரசியலிலோ இந்திய நாட்டுக்குள்ளோ ஏதேனும் பாதிப்பை மாற்றத்தை இந்த கிரக அமைப்புகள் ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

     திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களின் எண்களைப் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட இந்த அலுவலகத்தில், கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி ஜான் கிளமண்ட் தலைமையில் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் சேகர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
 
-இணைய செய்தியாளர்-தேனி ராஜா

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை..! பெண்கள் போராட்டம்..!

           பேரூராட்சி அலுவலகம் முற்றுகை : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடத்துடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 10 நாட்களாக ஆயக்குடி பேரூராட்சிப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி வட்டாச்சியர், பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.     
 -தேனி முருகேஸ் 

பயோடெரரிசம்


எந்த உயிரினமும் தன் வாழ்க்கை முறையை தன் வாழ்விடத்தை தானே அழித்துக்கொள்வதில்லை மனிதன் மட்டும்தான் அழித்து கொண்டே இருக்கிறான் இயற்கை எவ்வளவுதான் தாக்குபிடித்து ஈடுகொடுக்கும் ?
          "இனிமேல் மனிதன் அறிவுபெற இயற்கையிடம்தான் திரும்பவேண்டும் என்றார் தாமஸ் பெயின். ஆம் ! இயற்கையின் ஆற்றல் மிகு விதிகளை மாற்ற முயற்சிப்பது வெற்றியைத்தராது என்பது இப்போதுள்ள சூழல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கு புரிந்திருக்க வேண்டும். புரிந்து கொள்ளவில்லை என்றால், புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாட்டால்-இயற்கை அழிப்பு தீவிரவாதத்தால் (பயோடெரரிசம்) உலகமக்கள் வதைபட வேண்டுமா என்ன.
          மக்களே (இளைஞர்களே) உங்கள் பகுதியில் இன்றுமுதல் நெகிழித்தால் (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்ப்போம், வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம்பிரித்து வெளியோற்றுவோம் நகராட்சி, மாநகராட்சி ஊழிர்களுக்கு உதவி செய்வோம், ஊக்கப்படுத்துவோம்.
-பசுமை நாயகன்
அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்